விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா மற்றும் கலையரங்கம் திறப்பு விழா
புதுக்கோட்டை மாவட்டம் அணவயல்,எல்.என்.புரம் , அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் விழா மற்றும் கலையரங்கம் திறப்பு விழா 07-02- 2026 சனிக்கிழமை காலை 10 மணி அளவில் நடைபெற்றது.
பள்ளி மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் இனிதே விழா தொடங்கியது. இவ்விழாவில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு. சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் கலந்துகொண்டு கலையரங்கத்தை திறந்து வைத்து மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்
தலைமையாசிரியர் திரு.இரா.விசுவநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார்.மாணவ மாணவியரின் சிலம்பாட்டம் நடைபெற்றது.உதவி தலைமையாசிரியர் திரு.தங்கவேலு விழா நிகழ்வுகளை தொகுத்து வழங்கி இறுதியில் நன்றியுரை வழங்கினார்
பத்திரிக்கை செய்தி
ஆலங்குடி அருகே எல்.என்.புரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினார்
இவ்விழாவில் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி புதிய கலையரங்கம் திறக்கப்பட்டது
இதில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் கொண்டு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி புதிய கலையரங்கத் தையும் திறந்து வைத்தார்.அப்போது உரையாற்றிய அமைச்சர், நீங்கள் அனைவரும் நான் முதல்வன் திட்டத்தில் பதிவு
செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த மிதிவண்டிகள் மிகவும் பயனுள்ளதாக உங்களுக்கு எல்லா விதத்திலும் இருக்கும் என்றும் எந்த விதத்திலும் பசுமையை பாதிக்காது என்றும் தெரி வித்தார்.
விலையில்லா மிதி வண்டிகள் வழங்க வந்த அமைச்சருக்கு பள்ளி மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் பள்ளியின் சார்பாக வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.
இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள், மாணவ மாணவிகள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர்கலந்து கொண்டனர்.


.jpeg)
.jpeg)

.jpeg)


.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)


.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)


No comments:
Post a Comment