Message
எல்.என்.புரம், அரசு மேல்நிலைப்பள்ளி அன்புடன் வரவேற்கிறது
School email id: 36ati043@gmail.com
1979 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட லெட்சுமி நரசிம்மபுரம் அரசு மேல்நிலைபள்ளியானது புதுக்கோட்டைமாவட்டம், அணவயல் ஊராட்சியில் அமைந்துள்ளது.இங்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயிற்றுவிக்கப்படும் அரசு பள்ளிஆகும் , இது கிராமப்புற மாணவர்களுக்கு மதிய உணவை வழங்குகிறது. இது, 10 கணினிகள் மற்றும் ஒரு நூலகத்துடன் கல்வி, கலை மற்றும் உடற்கல்வி உள்ளிட்ட விரிவான பாடத்திட்டத்தை அளிக்கிறது.
எல்.என். புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 23.01.2026 வெள்ளிக்கிழமை நெகிழிப் பை பயன்பாட்டை தவிர்க்க வேண்டியும் துணிப்பையை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பசுமைப்பள்ளி திட்டத்தின் கீழ் நெகிழிப்பை தவிர்ப்போம்.. துணிப்பையை பயன்படுத்துவோம்... என முழக்கமிட்டு மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்,
No comments:
Post a Comment